Shiva Temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


கொங்கு நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

சிவஸ்தலம் இருப்பிடம்இறைவன் பெயர்
1திருநணா-பவானிசங்கமேஸ்வரர்
2திருச்செங்கோடுஅர்த்தநாரீஸ்வரர்
3கருவூர்-கரூர்பசுபதிநாதர்
4திருமுருகப்பூண்டிதிருமுருகநாதசுவாமி
5கொடுமுடிகொடுமுடிநாதர்
6திருப்புக்கொளியூர்-அவிநாசிஅவிநாசியப்பர்
7வெஞ்சமாக்கூடல்விகிர்தநாதேஸ்வரர்

தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மேற்கூறிய 7 சிவஸ்தலங்களும் அமைந்துள்ளன.



கொங்கு நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள். Map courtesy by: Google Maps

தகவல் பகுதி

பஞ்சபூதத் தலங்கள்

பஞ்சபூதத் தலங்கள் என்பவை நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களுக்கு உரிய சிவாலயங்களாகும். அவை :

1. திருவண்ணாமலை நெருப்பு
2. காஞ்சிபுரம் (நிலம்)
3. திருவானைக்காவல் (நீர்)
4. திருக்காளத்தி (காற்று)
5. சிதம்பரம் (ஆகாயம்)

இத்தலங்கள் அனைத்தும் தென்னிந்தியாவில் அமைந்துள்ளன. திருக்காளத்தி ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.


பஞ்ச சபை ஸ்தலங்கள்

சிவபெருமான் நடன கோலத்தில் நடராஜராக எழுந்தருளியுள்ள ஸ்தலங்கள் பஞ்ச சபை ஸ்தலங்கள் ஆகும். அவை :-

1. சிதம்பரம் (பொற்சபை)
2. மதுரை (வெள்ளிசபை)
3. திருவாலங்காடு (இரத்தினசபை)
4. திருநெல்வேலி (தாமிரசபை)
5. குற்றாலம் (சித்திரசபை).